செய்திக்குறிப்புகள்:
மருத மரத்தை தல விருட்சமாக கொண்ட சிவன் கோவில்.
கருவூர் சித்தரின் குரலுக்கு செவி சாய்த்த நிலையில் காட்சி.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது திருப்புடைமருதூர் கோமதி அம்மை உடனுறை நாறும்பூநாத சுவாமி திருக்கோவில். மருத மரத்தை தல விருட்சமாக கொண்டு விளங்கும் இந்த திருக்கோவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமையப்பெற்றுள்ளது.
முற்காலத்தில் இங்கு இறைவனை தரிசிக்க கருவூர் சித்தர் வந்த போது தாமிரபரணியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதாம். அதனால் ஆற்றின் மறுகரையில் நின்றபடியே கோவிலை நோக்கி நாறும் பூக்கள் கொண்ட வனத்தின் நடுவே வீற்றிருக்கும் இறைவன் என்ற பொருளில் நாறும்பூநாதா என கருவூர் சித்தர் அழைத்திட அவரின் குரலுக்கு செவிசாய்த்து இறைவன் காட்சியளித்ததாக வரலாறு கூறப்படுகிறது. எனவே இங்கு கருவறையில் மூலவர் நாறும்பூநாதர் லிங்கம் சற்றே இடப்புறம் சாய்ந்த திருக்கோலத்தில் இன்றளவும் காட்சித் தருவது சிறப்பம்சம்.