- நவதிருப்பதிகளுள் செவ்வாய் ஸ்தலமாக விளங்கும் திருக்கோளூர்.
- குபேரன் சாபம் நீங்கப் பெற்ற ஸ்தலம்.
திருநெல்வேலி அருகில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமையப்பெற்றுள்ள ஓன்பது வைணவ திருக்கோயில்கள் நவதிருப்பதிகள் என்று போற்றப்படுகின்றன. இவற்றுள் திருநெல்வேலி - திருச்செந்தூர் வழிப்பாதையில் உள்ள திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலும் ஒன்றாகும்.
நவதிருப்பதிகளுள் செவ்வாய் ஸ்தலமாக விளங்கும் இங்கு குபேரன் தான் பெற்ற சாபத்தால் இழந்த செல்வங்களை இத்தல பெருமாளை வணங்கி மீண்டும் பெற்றான் என கூறப்படுகிறது. இதனை மெய்பிக்கும் வகையில் இங்கு கருவறையில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சித்தரும் மூலவர் பெருமாள் குபேரனுக்கு படியளந்த மரக்காலை தனது தலையின் கீழ் வைத்தபடி சேவை சாதிக்கிறார் என்பது சிறப்பம்சம்.
Image source: Facebook.com