- மேற்கு நோக்கிய ஸ்தலமாக விளங்கும் சிவசைலம் கோவில்.
- பாண்டிய நாட்டில் அபூர்வமாக நான்கு கரங்களோடு காட்சித்தரும் அம்பிகை.
பொதுவாக பாண்டிய நாட்டில் உள்ள சிவாலயங்களில் பிரதானமாக கருவறையில் எழுந்தருளி இருக்கும் அம்பிகை ஒரு கரத்தில் மலர் தாங்கி, மற்றொரு கரத்தை கீழே தொங்கவிட்டபடி நின்ற கோலத்தில் காட்சித்தருவார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக மதுரை மீனாட்சி அம்மை, திருநெல்வேலி காந்திமதி அம்மை, சங்கரன்கோவில் கோமதி அம்மை, பாபநாசம் உலகம்மை, குற்றாலம் குழல்வாய்மொழி அம்மை என கூறிக்கொண்டே போகலாம்.
ஆனால் திருநெல்வேலி அருகே மேற்கு நோக்கிய சிவாலயமான சிவசைலம் சிவசைலநாதர் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் பரமகல்யாணி அம்மை நான்கு திரக்கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சித்தருகிறாள் என்பது சிறப்பம்சம் ஆகும்.
பாண்டிய நாட்டு பகுதியில் அபூர்வமாக இந்த சிவசைலம் பரமகல்யாணி அம்மை தவிர, கரிவலம்வந்தநல்லூர் ஓப்பனையம்பிகை, கங்கைகொண்டான் ஆனந்தவல்லி அம்மை ஆகியோரும் சோழ நாட்டு சிவாலயங்களில் உள்ள அம்பிகையை போல நான்கு கரங்களுடன் காட்சித்தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Image source: dinamalar.com