செய்திக்குறிப்புகள்:
நெல்லையப்பர் கோவில் காவல் தெய்வமாக விளங்கும் சங்கிலிபூதத்தார்.
இங்கு சங்கிலிபூதத்தார் மூன்று நிலைகளில் காட்சித்தருகிறார்.
திருநெல்வேலி மாநகரில் உள்ள சுவாமி நெல்லையப்பர் - காந்திமதி அம்மை கோவிலின் தென்கிழக்கு மூலை மதில் சுவற்றை ஓட்டி அமையப்பெற்றுள்ளது மூன்று நிலை சங்கிலிபூதத்தார் திருக்கோவில்.
இங்கு மதில் சுவற்றின் மீது அமர்ந்தபடி சுதை வடிவில் மேல் தளத்திலும், சித்திர ஓவியமாக நடுத் தளத்திலும், கல் விக்கிரக திருமேனியாக கீழ்த் தளத்திலும் சங்கிலிபூதத்தார் காட்சித்தருகிறார். ஒரே இடத்தில் நின்றபடியே இங்கு மூன்று நிலைகளில் சங்கிலிபூதத்தாரை தரிசிக்கலாம் என்பது சிறப்பம்சம் ஆகும்.