- பங்குனி உத்திர விழாவில் உடையவர் லிங்க பூஜை.
- வருடத்திற்கு ஒரு முறை எட்டு நாட்கள் மட்டுமே தரிசிக்க முடியும்.
"திங்கள்நாள் விழமல்கு திருநெல்வேலி" என்று ஞானசம்மந்தரால் பாடப்பெற்ற திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதி அம்மை உடனுறை சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா நாளை 09/03/2022 அன்று காலை சுவாமி சன்னதி சிறிய கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்க இருக்கிறது.
பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறும் இந்த திருவிழாவின் இரண்டாம் நாளான 10/03/2022 அன்று முதல் எட்டாம் நாளான 17/03/2022 வரை மாலை 5.30 மணிக்கு மேல் உடையவர் லிங்கத்திற்கு அனைவரததானநாத மண்டபத்தில் வைத்து அபிஷேங்கங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறும். இந்த உடையவர் லிங்கத்தை வருடத்திற்கு ஒரு முறை பங்குனி உத்திர திருவிழாவின் எட்டு நாட்கள் மட்டுமே பக்தர்கள் தரிக்க முடியும். மற்ற நாட்களில் இந்த லிங்கமானது சுவாமி சன்னதி கருவறைக்குள் ரகசிய மூர்த்தமாக இருக்கும் என்பது சிறப்பம்சம் ஆகும்.