செய்திக்குறிப்புகள்:
எண்ணற்ற மக்களின் குலதெய்வமாக விளங்கும் சொரிமுத்து அய்யனார் கோவில்.
வெண்கல மணிகளை விழுங்கிய நிலையில் காட்சியளிக்கும் இலுப்பை மரம்.
திருநெல்வேலி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அகத்தியர் முற்காலத்தில் சிவபூஜை மேற்கொண்ட சிறப்பை பெற்ற இந்த கோவிலில் மகாலிங்கம், பூர்ணா மற்றும் புஷ்கலா உடனுறை சொரிமுத்து அய்யனார், சங்கிலிபூதத்தார், பிலாவடி இசக்கி, மேலவாசல் பூதத்தார், பேச்சியம்மன், சுடலை மாடசாமி, பிரம்மராட்சி அம்மன், கரடி மாடசாமி, தளவாய் மாடசாமி, தூசி மாடசாமி, பட்டவராயர் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலிக்கிறார்கள்.
எண்ணற்ற குடும்பங்களின் குலதெய்வக் கோவிலாக விளங்கும் இங்கு பக்தர்கள் வேண்டிக்கொண்டு வெண்கல மணிகளை இங்குள்ள இலுப்பை மரத்தில் கட்டுவது வழக்கமாக உள்ளது. அப்படி பக்தர்களால் கட்டப்பட்ட பல பெரிய வெண்கல மணிகள் இலுப்பை மரத்திற்குள் பொதிந்து மரமானது மணிகளை முழுங்கிய போல காட்சித்தருகிறது. எனவே இந்த மரம் மணி முழுங்கி மரம் என பக்தர்களால் சிறப்பாக அழைக்கப்பட்டு வருவது சிறப்பம்சம் ஆகும்.