- நெல்லை மாவட்டம் அரசு பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
- மாவட்ட ஆட்சியர் விஷ்ணு முன்னிலையில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் அப்பாவு அவர்களால் 20 அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கி வைக்கப்பட்டது.
திருநெல்வேலி ராதாபுரம் தொகுதி கூடங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 20 அரசு பள்ளிகளுக்கு தொழில் நுட்பங்களுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, அதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது . விழாவினை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் விஷ்ணு முன்னிலை வகித்தார்.
மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது . விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசினார். அப்பொழுது தெரிவித்ததாவது;
தமிழகத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் அனைத்து பள்ளிகளிலும் அமைக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கடந்த வருடம் இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டுவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அதை நிறைவேற்றும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது தமிழக வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனை.
ராதாபுரம் அரசு ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி என 97 அரசு பள்ளிகள் மொத்தம் இருக்கின்றது . அனைத்து பள்ளிகளுக்கும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திதியில் இருந்து ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்த நேரத்தில் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்து அமுல் படுத்தியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அப்பாவு அவர்கள் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் வி. எஸ்.ஆர் ஜெகதீஷ் ,தாசில்தார் ஏசுநாதன், திட்ட இயக்குனர் பழனி மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் மேலும் பலர் இவ்விழாவில் பங்கேற்றனர்.
Image source: dailythanthi.com