தென்காசி மாவட்டம், இலஞ்சி சிற்றாற்று வீரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்று வரும் தை திருவிழாவில் நேற்று (31/01/2022) ஏழாம் திருநாள் மண்டகப்படி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை ஒட்டி நேற்று மதியம் 12.00 மணிக்கு பால் குடம் எடுக்கும் விழாவும் தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு மேல் சிற்றாற்று வீரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் கூடிய அலங்கார தீபாராதனையும், இரவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்று, சப்பர வீதி உலாவும் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வணங்கினார்கள்.