- நெல்லை மாவட்டம் முழுவதும் கொளுத்தும் வெயில்.
- தாமிரபரணி, நம்பியாறு உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு மக்கள் படையெடுப்பு.
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை காலமான தற்போது கடுமையாக வெயில் கொளுத்தி வரும் நிலையில், பொதுமக்கள் வெக்கையில் இருந்து தப்பித்துக் கொள்ள நீர்நிலைகளை தேடி படையெடுத்து வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகளாக கருதப்படும் அகத்தியர் அருவி, காரையார், சேர்வலாறு, பாபநாசம், அம்பாசமுத்திரம் தாமிரபரணி படித்துறை, திருப்புடைமருதூர் தாமிரபரணி படித்துறை, முக்கூடல் சங்கமம், மணிமுத்தாறு அருவி, சுத்தமல்லி அணைக்கட்டு, களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பியாறு, நாங்குநேரி பெரியகுளம், மருதூர் அணைக்கட்டு, முறப்பநாடு தாமிரபரணி, கருங்குளம் தாமிரபரணி, திருவைகுண்டம் அணைக்கட்டு உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் குளிப்பதற்காக காலை மற்றும் மாலை வேளையில் குவிந்து வருகிறார்கள்.
வார இறுதி விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் நீர்நிலைகளுக்கு சென்று குளித்தும், உணவுகள் சமைத்து ஒன்றாக உண்டும் கோடை காலத்தை கழித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Image source: Facebook.com