விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை பகுதிகளில் பருத்தி விளைச்சல் இந்த ஆண்டு அமோகமாக உள்ளது. வெம்பக்கோட்டை பகுதிக்கு உட்பட்ட சத்திரம், சிப்பிபாறை, ஊத்துப்பட்டி, ஏழாயிரம்பண்ணை, சுப்ரமணியபுரம், சல்வார்பட்டி, சங்கரபாண்டியபுரம், கணஞ்சாம்பட்டி, மடத்துப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
மூன்று மாத பயிரான பருத்தி வழக்கத்தை விட இந்த ஆண்டு அமோகமாக விளைந்துள்ள நிலையில், குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 9000 வரை விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர். சென்ற ஆண்டு பருத்தி ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 7000 முதல் ரூபாய் 7500 வரை விற்பனை நிலையில், தற்போது ஆரம்பகட்டத்திலேயே ஒரு குவிண்டால் ரூபாய் 9000 ஆயிரம் வரை விலை போவது குறிப்பிடத்தக்கது.