தென்காசி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வரும் 19/02/2022 அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் உள்ள தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரால் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறையின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், அந்த அறையின் முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தலுக்கு முந்தைய நாளான வருகிற 18/02/2022 தேதியன்று அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.