தென்காசி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் நாளை (22/02/2022) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கடையநல்லூர் நகராட்சியில் பதிவான வாக்குகள் விஸ்டம் மெட்ரிக் பள்ளியிலும், புளியங்குடி நகராட்சி, ராயகிரி, சிவகிரி, வாசுதேவநல்லூர் ஆகிய பேரூராட்சிகளின் வாக்குகள் புளியங்குடி வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியிலும், சங்கரன்கோவில் நகராட்சி, திருவேங்கடம் பேரூராட்சியில் பதிவான வாக்குகள், சங்கரன்கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் பள்ளியிலும், செங்கோட்டை நகராட்சி, அச்சன்புதூர், குற்றாலம், இலஞ்சி, மேலகரம், பண்பொழி, எஸ்.புதூர், வடகரை கீழ்பிடாகை ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், தென்காசி, சுரண்டை நகராட்சிகள், ஆய்க்குடி, சாம்பவர்வடகரை பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் தென்காசி ஐ.சி.ஐ. அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும், ஆலங்குளம், ஆழ்வார்குறிச்சி, கீழப்பாவூர், சுந்தரபாண்டியபுரம் ஆகிய பேரூராட்சிகளில் பதிவாக வாக்குகள் அத்தியூத்து சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியிலும் வைத்து எண்ணப்படுகின்றன. இதனை அடுத்து மேற்கண்ட ஆறு வாக்கு எண்ணும் மையங்களுக்கும் மூன்று அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Image Source: dailythanthi.com