- நெல்லை பாளையங்கோட்டையில் சுகாதார ஆரோக்ய மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
- மேயர் டி எம் சரவணன் தலைமை தாங்க துணை மேயர் கே ஆர் ராஜு முன்னிலை வகித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சுகாதார ஆரோக்கியாமையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 16 8 2022 அன்று நடைபெற்றது .
திருநெல்வேலி மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் சுகாதார ஆரோக்கிய மையங்களுக்கு கட்டட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தலா 25 லட்சம் மதிப்பில் , பத்துக்கும் மேற்பட்ட சுகாதார மையங்கள் கட்டப்பட உள்ளன.
முன்பு நான்கு கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு விட்டன. இப்பொழுது ஒன்பதாவது வார்டுக்கு உட்பட்ட இயற்கை நாயனார் தெரு- வடக்குப்படை பகுதியில் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த பகுதியில் நகர்ப்புற ஆரோக்கிய மையம் கட்டுவதற்கு 25 லட்சம் ரூபாய் மதிப்பீடு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு பி.எம் சரவணன் தலைமை வகிக்க, துணை மேயர்கே.ஆர் ராஜு முன்னிலை வகித்தார் . தொகுதி உறுப்பினரும், திமுக மத்திய மாவட்ட செயலாளருமான மு. அப்துல்வஹாப் அடிக்கல் நாட்டினார் .மண்டல தலைவர்கள் தச்சநல்லூர் ரேவதி பிரபு மண்டல உதவி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, பாளையங்கோட்டை பிரான்சிஸ் , மாமன்ற உறுப்பினர்கள் பேச்சியம்மாள் ,சகாய ஜூனியர் மேரி ஜெகநாதன், சுப்புலட்சுமி ,சின்னத்தாய், உள்பட மேலும் பலர் பங்கேற்றனர்.
Image source: dailythanthi.com