செய்திக்குறிப்புகள்:
- நெல்லை சேரன் மகாதேவி வட்டத்தில் 16 மையங்களில் குரூப் -4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
- சேரன்மகாதேவி வட்டத்தில் 85 சதவீதம் பேர் குரூப் 4 தேர்வில் பங்கேற்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன் மகாதேவி வட்டத்தில் 16 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. இது 85 சதவீதம் பேர் பங்கேற்றனர்.
நெல்லை சேரன்மகாதேவி வட்டத்தில் சேரன் மகாதேவியில் ஸ்காட் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி, பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, முக்கூடல், பத்தமடை, வீரவநல்லூர், உள்ளிட்ட இடங்களில் குரூப்- 4 தேர்வு, மொத்தம் 16 மையங்களில் நடைபெற்றது.
மகாதேவி வட்டத்தில் தேர்வு எழுதுவதற்காக 4204 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டன.இதில் 3357 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். 647 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
9:00 மணிக்கு மேல் தேர்வு எழுதும் மையத்திற்கு வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை . இதனால் சில பெற்றோர்கள் மன வருத்தத்துடன் காணப்பட்டனர். சில மையங்களில் காவலர்கள் பெற்றோர்கள் இடையே வாக்குவாதமும் எழுந்தது.
.
திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிட நல பழங்குடியினர் நலத்துறை அலுவலர் தியாகராஜன் தலைமையில் இந்தத் தேர்வு நடந்தது. சேரன்மகாதேவி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டு எழுதும் தேர்வாளர்களை கண்காணித்தனர்.
.