செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வு பெற்றோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற இருக்கிறது.
- அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் தங்களுடைய குறைகளை விண்ணப்பித்து மனு அளிக்கலாம்.
திருநெல்வேலி மாவட்டம் ஓய்வு பெற்றோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25ஆம் தேதி வியாழக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமை தாங்குகிறார் . ஓய்வூதிய இயக்குனர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வார்.
நெல்லை மாவட்ட அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வு ஊதியர்கள் தங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்யும் மனுக்களை வரும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓய்வூதிய இயக்குனர் ஓய்வூதியர்களின் குறைகளை நிவர்த்தி செய்வது குறித்தும் மனுக்களை பற்றிய நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை வழங்குவார்.
எனவே ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் தங்களது ஓய்வூதியம் கிடைக்க பெறாமல் நிலுவையாக இருந்தால் முழு முகவரியுடன் விண்ணப்ப மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மனுவில் இறுதியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலகம், கோரிக்கை மற்றும் தற்போது நிலுவையில் உள்ள அலுவலகம், ஓய்வூதிய எண், முகவரி, எண், குறிப்பிட்டுள்ள ஆணை நகல் ஆகிய அனைத்தும் சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தில் இணைக்கப்பட வேண்டும் . வருகிற 12-ம் தேதிக்கு பின்னர் வரும் மனுக்கள் பரிசீலனைக்கு ஏற்றுகொளள பட மாட்டாது என்று மேலும் மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Image source: dailythanthi.com