மேற்கு திசை நோக்கி காட்சி தரும் சுயம்புவாய் சிவபெருமான். இருட்டுக்கு ஒலி கொடுப்பவனாய் இருண்ட வாழ்க்கைக்கு விளக்கு ஏற்றுபவனாய் உள்ளத்தில் நிறைவாய் குடி கொண்டவனாய் எம் பெருமான் எவ்வளவு அழகாக உயர்ந்து நிற்கின்றான்!
கந்தபுரி , வேதபுரி , அங்காராபுரி என பல பெயர்களில் அழைக்கப்படும் திருத்தலம். இறைவன் சகலமுமாய் காட்சி தரும் திருத்தலம். விநாயகப் பெருமான், தையல் நாயகி , வைத்தீஸ்வரன் கோவில், முத்துக்குமார சுவாமி, அங்காரகன் எழுந்தருளி நாற் புறமும் தலம் , மூர்த்தி , தீர்த்தம் எனபுகழ்பெற்ற பெற்ற திருத்தலம். ஆறு கால பூஜை எப்பொழுதும் நடைபெறும் அற்புதமான திருத்தலம்.தேவாரப் பாடல்களில் அய்யனின் புகழ் பாடப்பட்ட திருத்தலம் .
ஜடாயு மோட்சம் பெற்ற திருத்தலம். ராவணன் சீதா தேவியை கடத்திப் போகையில் தடுப்பதற்கு முற்பட்ட ஜடாயுவின் சிறகொடிந்து இந்த ஸ்தலத்திலே கீழே விழ.... ராமர் ஜடாயுவை சகோதரனாய் ஏற்று ஈம சடங்கு செய்து, தன் கடமைதனை நல்லவிதமாய் செய்து முடித்த திருத்தலம். அந்த ஜடாயு குண்டத்தில் பெறப்படும் விபூதி தனை , சித்தாமிர்த தீர்த்தக் குளநீரினில் குழைத்து முத்துக்குமாரசுவாமி இடத்தில் உள்ள குழி அம்மியில் அரைத்து, தையல்நாயகி பாதத்தில் வைத்து ஸ்லோக பூஜைகள் செய்யப்பட்டு சிறு உருண்டைகளாக பிரசாதம் செய்யப்படுகிறது.
அவ்வாறு பூஜையில் இருந்து பெறப்படும் மருந்துமாகிய சிறு உருண்டைகளை மனதார வேண்டி உட்கொண்டால் தீராத நோய்களையும் சேர்த்து வைப்பான் மெய்யன் அவன்.
அங்கே குடின கொண்டிருக்கும் செவ்வாய் பகவானுக்கு அர்ச்சனை செய்தால் , தோஷங்கள் அனைத்தும் விலகி பரிபூரணமான அருள் கிடைக்கும் . திருமணம் ஆகாதவர்க்கு விரைவில் திருமணம் நடக்கும்.
புள்ளிருக்கு வேலூர் என்று அழைக்கப்படும் அந்த தெய்வீக திருத்தலத்திற்கு அனைவரும் சென்று வணங்கி வழிபட்டு வாழ்க்கையில் அனைத்து வளங்களும் காண்போம்.