கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் தேதி முதல் வாரத்தின் மூன்று நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நோய்த்தொற்று குறைந்துள்ளதால் அனைத்து நாட்களும் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமையான நேற்று மாவட்டத்தில் உள்ள பல பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்த நிலையில், களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதியில் நடைபெற்று வரும் புலிகள் கணக்கெடுக்கும் பணி காரணமாக காரையாற்றில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கும், அகத்தியர் அருவி பகுதிக்கும் செல்ல வரும் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.