தமிழகத்தில் கடந்த 26/01/2022 அன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் சுதந்திர போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. தற்போது இந்த அலங்கார ஊர்தி தமிழக அரசு உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணமாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று விருதுநகரை வந்தடைந்தது. விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்னர் நேற்று பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்ட இந்த ஊர்தியை திரளான மக்கள் வந்து பார்வையிட்டு மரியாதை செலுத்தி சென்றனர்.