- குரூப்-2, 2ஏ போட்டித் தேர்வுகள் அறிவிப்பு.
- இலவச நேர்முக பயிற்சி வகுப்பு இன்று துவக்கம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-2, 2 ஏ எழுத்துத் தேர்வில் பங்கேற்க உள்ள போட்டி தேர்வாளர்களுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் திருநெல்வேலியில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக சுமார் 5,413 காலிப்பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ, முதல்நிலை எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு ஏதேனும் ஒரு பிரிவு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து இன்று (12/03/2022) காலை 10.00 மணிக்கு துவங்க உள்ளது. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ள இந்த இலவச நேர்முக பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் நகலுடன் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image source: Facebook.com