செய்திக்குறிப்புகள்:
- நெல்லை தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் பேரூராட்சி பகுதியில் 11 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது.
- திங்கள் கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பேரூராட்சி தலைவி தேவி ஐயப்பன் தொடங்க வைத்தார்.
நெல்லை மாவட்டம் இந்திய அரசு தூய்மை இந்திய இயக்க திட்டத்தின் கீழ் பல்வேறு சிறப்பு செயல்களை செய்து வருகின்றது அதன்படி இந்தத் திட்டமும் செயல்முறைக்கு வந்திருக்கின்றது.
தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் சேரன் மகாதேவியின் தாமிரபரணி நதிகள் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு வடிகட்டி படுகை நிலையம் ரூபாய் 41 லட்சம் மதிப்பில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது
திங்கள் கிழமை அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவி தேவி ஐயப்பன் தொடங்க வைத்த இந்த திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதியில் 11 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட இருக்கிறது.
நிகழ்ச்சிக்கு நகர திமுக செயலர் மனிஷா செல்வராஜ், கூட்டுறவு பண்டக சாலை தலைவர் ஐயப்பன், பேரூராட்சி உறுப்பினர்கள் அன்வர் உசேன்பவித்ரா தேவி, தங்கராஜ் சங்கர் ,ஆனி பரக்கத் பேகம், ஜெய்புனிஷா வருகை புரிந்து பங்கேற்பில் கலந்து கொண்டனர்.
Image source: dailythanthi.com