திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழா 17- 8 -2022 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் மிகவும் சிறப்பாக தொடங்கியது .
வருடம் தோறும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . இந்த வருடமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிய கொடியேற்றம் கோலாகலமாய் நடைபெற்றது.
புதன்கிழமை அன்று அதிகாலை 5.30 மணி அளவில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. கொடியேற்றத்தை தொடர்ந்து மாலை கொடிபட்ட வீதி உலா நடைபெற்றது.
14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின் முறை யான 12-ம் திருவிழா மண்டகப்படி மண்டலத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டது. அந்த கொடிபட்டத்தை மூன்றாம் படி செப்பு ஸ்தலத்தார் பாலசுப்பிரமணிய ஐயா யானை மீது வைத்து கையில் ஏந்தியவாறு ஊர் வீதி உலா எடுத்து வந்தார்.
திருக்கோவில் ஐதிக படி சேர்த்த பிறகு கொடியேற்றத்தை முன்னிட்டு புதன்கிழமை காலை திருக்கோவிலில் அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டது. விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மூன்று மணிக்கு உதய மார்த்தாண்ட தீபாராதனை விழா என அனைத்து நிகழ்ச்சிகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றது .
அதிகாலை கொடிபட்டம் வீதி உலா வந்து செப்பு கொடி மரத்தில் காப்பு கட்டிய ஹரிஹர சுப்பிரமணிய பட்டர் கொடியினை ஏற்றினார்.
இதைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை அனைத்தும் நடைபெற பக்தர்கள் அனைவரும் தெய்வீக தரிசனத்தை கண்டு களித்தனர்.
அன்றும் மாலை அப்பர் சுவாமிகள் திருக்கோவிலில் தங்க சப்பரத்தில் புறப்பட்டார் . திரு வீதியில் உழவாரப் பணி செய்யும் நிகழ்ச்சி இரவு தந்தபல்லக்கில் ஸ்ரீ பெலி நாயகர் அஸ்திர தேவருடன் ஒன்பது சன்னதியில் வரும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது .விழா ஏற்பாடுகளை திருக்கோவில்
தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Image source: dinamani.com