- விளையாட்டு விடுதியில் மாணவர்கள் சேர்க்கை.
- அண்ணா விளையாட்டு மைதானத்தில் உடல் தகுதி தேர்வு.
தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு விளையாட்டுத்துறையில் சாதனை புரிவதற்கு உரிய பயிற்சி, சத்தான உணவு, தங்குமிடம் ஆகியவற்றை வழங்கும் விளையாட்டு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விளையாட்டு பள்ளிகளின் விடுதியில் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் சேர்வதற்குண்டான உடற்தகுதி தேர்வுகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் மாணவர்களுக்கான தடகளம், குத்துச் சண்டை, வாள் சண்டை, கபடி, ஹாக்கி, கூடைப்பந்து, இறகுப்பந்து உள்ளிட்ட இருபது விளையாட்டுகள் மற்றும் மாணவிகளுக்கான தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கபடி உள்ளிட்ட பதினாறு விளையாட்டுகள் ஆகியவற்றுக்கான உடல்தகுதி தேர்வுகள் நடைபெற்றன.இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த சுமார் 300 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Image source: Facebook.com