செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி குப்பையில் ஞாயிற்றுக்கிழமை அன்று தீப்பிடித்தது.
- மூன்றாவது நாளாக தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராட்டம்.
தீ எனும் வார்த்தையில் தான் எத்தனை துன்பங்கள். துவள்வதும் பின்பு எழுவதும் … என சில சமயங்களில் போராட்டங்கள் சந்திக்கத்தான் வேண்டியுள்ளது. இது போலதான் நேற்று ஒரு நிகழ்வு நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியில் நடந்துள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட சொந்தமான குப்பை கிடங்கு இராமையன்பட்டியில் அமைந்து உள்ளது. திடீரென்று எதிர்பாராத விதமாக ராமையன்பட்டி குப்பை கிடங்கு கடந்த 22 ஆம் தேதி தீ பிடித்தது.
காற்று பலமாக வீசியதால் குப்பை கிடங்கில் பிடித்த தீ கட்டுக்குள் வரவில்லை. தீயணைப்பு படையினர் தீயை அணைப்பதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர் .
மாநகராட்சியின் குடிநீர் வாகனங்கள் மூலம் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் பேட்டை , பாளையங்கோட்டை தீயணைப்பு வாகனங்கள் கொண்டு தீயணைப்பு வீரர்கள் செயல் பட்டு வருகின்றனர்.
பொக்லைன் இயந்திரங்களால் மண்ணை அள்ளிக் கொட்டியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யப்பட்டு வரும் இந்த நிலையில் தீயால் எழுந்துள்ள புகை மண்டலத்தால் ராமையன்பட்டி ஊராட்சி மக்கள் அவதிக்குள்ளாகி துன்பப்பட்டு வருகின்றனர்.
பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்துக்கும் ஆதாரமாய் இருப்பது நெருப்பு என்றாலும் அந்த நெருப்பே சில சமயங்களில் நமக்கே துன்பம் தரவும் செய்கின்றது.. ஏன்! எதற்காக!யார் இதற்கு காரணம்! என்பதை உணர்ந்து முன் ஜாக்கிரதையாக ஒவ்வொருவரும் இருந்து செயல்பட்டால் இது போன்ற நிகழ்வுகளை தடுக்கலாம் என்று திருநெல்வேலி டுடே தன்னுடைய கருத்தை முன் வைக்கின்றது.
Image source: maalaimalar.com