செய்திக்குறிப்புகள்:
- சீர் மரபினர் , பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான ரூ 3 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும்.
- நவீன சலவையகங்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் அமைப்பதற்காக இந்த நிதி உதவி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியாளர் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நவீன சலவையகங்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கான நிதி உதவியை அரசு வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியாளர் விஷ்ணு அறிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சீர் மரபினர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் போன்றவர்கள் நவீன சலவையகங்கள் அமைக்கவும், ஆயத்த ஆடைகள் உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கவும் பொருளாதார மேம்பாட்டு தொடர்பாக மானியம் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அதற்குத் தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கான நிதி உதவி ரூ 3 லட்சம் வழங்குவதற்கு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அந்த தொழிலில் முன் அனுபவம் உள்ளவர்கள் 10 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். தொழிலில் முன் அனுபவம் பெற்ற சீர் மரபினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இவர்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படும் . அதுபோலவே தையல் தொழிலில் முன் அனுபவம் கொண்டவர்கள் ஆயத்த ஆடைகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கு பத்து பேர் கொண்ட குழுவாக அமைக்க வேண்டும் .
அந்த குழுவினர் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் நெல்லை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்கள் பெற்று அதை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் .
தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் சென்னையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல இயக்க ஆணையருக்கு பரிந்துரைக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் செயல்படும் சீர் மரபினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அறிவித்துள்ளார்.