- பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த எதிரொலி.
- மாவட்டம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே இயங்கின.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பொது போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.
இதனால் நேற்று அதிகாலை முதலே திருநெல்வேலியில் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே இயங்கின. மாநகரில் உள்ள வண்ணார்பேட்டை தாமிரபரணி போக்கு வரத்துக்கழக பணிமனை, புறவழிச்சாலை பணிமனைகளில் அதிக பேருந்துகள் ஓட்டுனர்கள் இல்லாததால் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தினந்தோறும் 900 பேருந்துகள் வரை தினமும் இயக்கப்பட்ட நிலையில், நேற்று காலை 7.00மணி நிலவரப்படி 300 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.
இதனால் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததும், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Image source: maalaimalar.com