தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 19/02/2022 அன்று நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் அன்று மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.இளங்கோவன் மேற்பார்வையில், தூத்துக்குடி மாநகர துணை காவல்துறை கண்காணிப்பாளர் திரு.கணேஷ், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சம்பத், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயராஜ் ஆகியோரின் தலைமையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வதை பற்றியும், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் நடைபெறக்கூடிய திருவிழாக்கள், முக்கிய சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும், ரவுடிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் துணை காவல்துறை கண்காணிப்பாளர்கள், காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.