தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 19/02/2022 அன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வாக்காளர்களின் பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்டவை அடங்கிய வாக்குச்சாவடி சீட்டு அச்சடிக்கும் பணி முடிவடைந்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு வினியோகம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று காலையில் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள ரகுமத்துலாபுரம் மேற்கு, வடக்கு ரத வீதி பகுதி, சிவன் கோவில் தெரு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெற்ற வாக்குச்சாவடி சீட்டு விநியோகிக்கும் பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சாருஸ்ரீ அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.