நாகர்கோவிலில் தேர்தல் விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் துவக்கி வைத்தார். வரும் 19/02/2022 அன்று நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு வாகனம் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய நான்கு நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் வரும் 17/02/2022 ஆம் தேதி வரை விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.