- திருநெல்வேலியில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.
- உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலி மாநகராட்சியில் 44 வார்டுகளில் தி.மு.க வெற்றி!
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் கடந்த 19/02/2022 அன்று உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள 55 வார்டுகளில் மொத்தம 409் வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், தேர்தல் அன்று மொத்தம் 2,20,899 வாக்குகள் பதிவானது. இதனையடுத்து நேற்று திருநெல்வேலி மாநகராட்சியில் பதிவான வாக்குகள் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைத்து எண்ணப்பட்டு வந்த நிலையில், ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டது.
இறுதியாக மாலையில் வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்ட நிலையில், திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் 44 வார்டுகளை திமுக கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர அ.தி.மு.க 4, காங்கிரஸ் கட்சி 3, இந்திய கம்யூனிஸ்டு கட்சி 1, ம.தி.மு.க 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 , சுயேச்சை 1 ஆகிய வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Image source: Facebook.com