- மாவட்ட அளவிலான வீரர்கள் தேர்வு கபடி போட்டி
- நெல்லை காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சரவணன் அவர்கள் துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூரில் வரும் 18/03/2022 அன்று முதல் 20/03/2022 வரை நடைபெற உள்ள தமிழ்நாடு மாநில அளவிலான சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் கலந்து கொள்ள தகுதி வாய்ந்த திருநெல்வேலி மாவட்ட வீரர்களை தேர்ந்தெடுக்கும் கபடி போட்டி கடந்த 02/03/2022 அன்று முதல் 05/03/2022 தேதி வரை விக்கிரமசிங்கபுரம் அருகில் உள்ள அகஸ்தியர்புரத்தில் வைத்து நடைபெற்றது.
மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டிக்கான ஏற்பாட்டை முன்னாள் காவல்துறை அதிகாரி ஸ்டான்லி ஜோன்ஸ் அவர்கள் ஏற்பாடு செய்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சரவணன் அவர்கள் துவங்கி வைத்தார். இந்த போட்டியில் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் மாநில அளவிலான கபடி போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் சார்பாக பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image source: dailythanthi.com