செய்திக்குறிப்புகள்:
- திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் வட்டார கல்வி அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
- இந்த வட்டார கல்வி அலுவலகத்திற்கு 11 லட்சம் ரூபாய் செலவில் கட்டுவதற்கான செயல்பாட்டு திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் வட்டார கல்வி அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வட்டார கல்வி அலுவலகத்திற்கு 11 லட்சம் ரூபாய் செலவில் கட்டுவதற்கான செயல்பாட்டு திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கலையரங்கு தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வட்டார கல்வி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் தொடங்கும் பணி ஏற்பாடு தொடங்கப்பட உள்ளது .
புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வள்ளியூர் நகர பஞ்சாயத்து தலைவர் ராதா ராதாகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் .
துணைத் தலைவர் கண்ணன் முன்னிலையில் வள்ளியூர் யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா அடிக்கல் நாட்டினார்.
வட்டார கல்வி அலுவலக அதிகாரிகள் மற்றும் நகர பஞ்சாயத்து கவுன்சிலர்கள் ஊழியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கலந்து கொண்டனர்.விழாவிற்கு ஏராளமானோர் வந்திருந்தனர். நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
Image source: dailydhanthi.com