திருநெல்வேலி மாநகராட்சியில் வரும் 19/02/2022 அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை வாக்குச்சாவடிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேவையான பொருட்களை தனித்தனியாக பிரித்து, சாவடி எண் குறிப்பிட்ட பையில் வைத்து கட்டி அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. இது தவிர வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வாக்களிக்க தேவையான முன்னேற்பாடுகளும் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.