நெல்லை தாமிரபரணி ஆற்றில் ஊர்வலமாக 79 விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த 31-8 - 2022 அன்று கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் இந்து முன்னணி சார்பில் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் பல்வேறு இடங்களில் வைத்து வழிபாடு செய்வது நடந்து வருகின்றது. இந்த ஆண்டும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் பல்வேறு இடங்களில் வைத்து வழிபாடு செய்து வந்தனர். மேலும் பல அமைப்புகள் தங்களுடைய அமைப்பு சார்பில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிப்பாடு நடத்தி வந்தனர்.
அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் முறையாக தினமும் பூஜை வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அங்கங்கே பகுதியில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் டவுன், தச்சநல்லூர், பாளையங்கோட்டை மற்றும் புறநகர் பகுதியில் ஏராளமான விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது. அனைத்து சிலைகளையும் மாவட்டத்தின் 12 இடங்களை குறிப்பிட்டு , கரைப்பதற்கு மாவட்ட ஆட்சியாளர் விஷ்ணு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி நேற்று மதியம் விநாயகர் சிலைகள் ஆட்டோ, லோடு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்டது. தெருக்கள் வீதிகளில் பிரம்மாண்டமாக செல்லும் விநாயக பெருமானை பொதுமக்கள் பக்திமயத்தோடு வணஙகினார்கள்.
அனைத்து விநாயகர் சிலைகளும் போலீஸ் பாதுகாப்போடு ஆற்றுக்குள் எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. . தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் தயாராக நின்ற நிலையில் பக்தர்களிடம் இருந்து சிலைகளை வாங்கிச் சென்று ஆழமான பகுதியில் சென்று கரைத்தனர்
நெல்லை துணை சூப்பிரண்டு பிரான்சிஸ் , இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Image source: dailydhanthi.com