திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு தென்காசி மாவட்டம் புதிதாக பிரிக்கப்பட்ட பின்னர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 உட்கோட்டங்கள் மற்றும் 34 காவல் நிலையங்களின் எல்லைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து புதிய உட்கோட்டங்கள் மற்றும் காவல் நிலையங்களுக்கு ஒரே அளவுகோலுடைய டிஜிட்டல் வரைபடம் தயாரிக்க காவல் துறை சார்பாக உத்தரவிடப்பட்டது. அதன்படி தயாரிக்கப்பட்ட ஒரே அளவுகோலுடைய டிஜிட்டல் வரைபடம் மற்றும் அதன் குறுந்தகடு ஆகியவற்றை திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சரவணன் அவர்கள் நேற்று வெளியிட, மாவட்டத்தில் உள்ள 5 உட்கோட்டங்கள் மற்றும் காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டது.