பல சங்கடங்கள் வரும் பொழுது தீர்வு பெற வேண்டி தெய்வத்தை நாடுகின்றோம்.
சங்கடங்கள் பல உண்டு துயரங்கள் மலையுண்டு- துன்பமும் நிறைய உண்டு. நிவர்த்திக்காக மனமும் தெய்வத்தை நாடுவதும் உண்டு.
நம்பினோர் கைவிடப்படார் என்பது பெரியவர் வாக்கு .நம்பிக்கையோடு தெய்வத்தை நினைத்து விரதம் இருந்தால் அதற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். அதற்காகத்தான் விரத நாட்களை நாம் தேர்ந்தெடுத்து வணங்குகின்றோம்.
வார விரத நாட்கள், மாத விரத நாட்கள், வருட விரத பண்டிகை நாட்கள் என அந்தந்த தெய்வத்தை நினைத்து வேண்டி விரதம் இருந்தால் நினைத்த காரியம் அனைத்தும் ஜெயமாகும்.
நான் இந்த பதிவை பதிவு செய்ய நினைத்தற்கு முதல் காரணம் நாளைக்கு விரத தினம் என்பது இன்று அறிந்து அவசரம் அவசரமாக சுத்தம் செய்து படைத்து , ஒருவித படபடப்பாக செய்வது என்பது விரதம் இருப்பதற்கான வழிமுறை கிடையாது.
இந்த வாரம் வரக்கூடிய விரத தினங்களை முன்பே தெரிந்து கொண்டால், அதற்கு முன்னேற்பாடாக எப்படி விரதம் இருக்கலாம். விரதத்துக்கு உரிய எந்த தெய்வத்தின் கோவிலுக்கு சென்று வரலாம் . என்னென்ன பொருட்களை முன்பாகவே வாங்கி பூஜைக்கு ரெடி பண்ணலாம்! விரத நாளில் என்னென்ன ஸ்லோகம் எத்தனை முறை படிக்க வேண்டும் என தெரிந்துகொண்டால் பூஜா பலன்கள் அனைத்தும் இனிதாக நடக்கும்.
விரத நாட்களில முக்கியமாய் நாம் செய்யக்கூடிய விஷயங்கள்..
1- அகமும் புறமும் தூய்மையாக மஞ்சள் நீராடுதல்.
2- வேண்டிய காரியங்கள் ஜெயமாக வேண்டி , தெய்வத்தை வணங்கி விளக்கேற்றி சந்தனம் குங்குமம் இட்டு கொள்ளுதல்.
3- வாழ்வினில் மகிழ்ச்சி நிலவ ஏலக்காய், முந்திரி, சர்க்கரை நிறைந்த பசும்பால் அருந்துவது..
4- வாழ்வினில் சுபீட்சம் பெற வாழைப்பழம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
5 - மங்கல வாழ்வு பெற தேங்காய் பால் அல்லது 2 பத்தை கீறிய தேங்காய் துண்டுகள் சாப்பிட வேண்டும்.
இவை அனைத்தும் எடுத்துக் கொள்வது உத்தமம்.
அன்றைய தினத்தில் தெய்வத்தின் நாமத்தை தொடர்ந்து உச்சரித்து கொண்டே இருக்க வேண்டும் .தீபத்தின் ஒளியை உங்களுக்குள் உணரவேண்டும். மனமும் உடலும் தூய்மை யோடு விரதம் இருந்து தெய்வத்தின் அருள் பெற்று- வாழ்வில் சிறப்பு பெற்று , வேண்டிய பலன் அனைத்தும் தாம் பெற்று, வாழ்ந்த பயனை அடைவோம்.
(ஆன்மீக நிகழ்ச்சியில் செவ்வாய்தோறும் தெய்வீக விரத குறிப்புகள் உங்கள் திருநெல்வேலி டுடே வில் பதிவினை படித்து பயன் பெறுங்கள்)