திருநெல்வேலி மாநகர், வண்ணாரப்பேட்டையில் உள்ள அய்யா வைகுண்டர் அன்பு பதியில் கடந்த 21/01/2022 அன்று தர்மத்திருக்காட்சி விழா துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் மூன்றாம் நாளான நேற்று மதியம் உச்சிப்படிப்பு, உகப்பெருக்கு பணிவிடையும், அன்னதானமும், மாலையில் திருச்சட்ட அருள்வாக்கும், இரவில் அன்னதானமும் நடைபெற்றது. இதில் திரளான அன்புக்கொடி மக்கள் கலந்து கொண்டு அய்யா வைகுண்டரை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 30/01/2022 வரை நடைபெறும் இந்த விழாவில் வரும் 28/01/2022அன்று மாலை 6.00 மணிக்கு மேல் கலி வேட்டை ஆடுதல் நிகழ்ச்சியும், வரும் 30/01/2022 அன்று மதியம் சமபந்தி அன்னதர்மம் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.