விருதுநகர் மாவட்டம்., வத்திராயிருப்பு அருகே அமையப்பெற்றுள்ள சதுரகிரி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் திருக்கோவில்கள் அமையப்பெற்றுள்ளன. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய தினங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள். வனத்துறைக்கு உட்பட்ட பகுதியில் இந்த கோவில் அமையப்பெற்றுள்ளதால் இங்கு செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பதால் அனைத்து நாட்களும் இங்கு சென்று வர முடியாது. இந்நிலையில் சனி பிரதோஷம் மற்றும் தை அமாவாசையை ஒட்டி இன்று முதல் வருகிற செவ்வாய்க்கிழமை வரை சதுரகிரி கோவிலுக்கு காலை மணி முதல் மணி வரை பக்தர்கள் செல்ல அனுமதியளிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே பக்தர்கள் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சதுரகிரி மலைக்கு சென்று தரிசனம் மேற்கொள்ளலாம்.