கொரோனா தொற்று பரவல் காரணமாக வாரத்தின் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் திருக்கோவில்களில் தரிசனம் மேற்கொள்ள பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பாபநாசம் பாபநாசநாதர் திருக்கோவில், காரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் ஆகியவற்றில் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தாமிரபரணி ஆற்றில் நீராடி நேர்த்தி கடன்களை செலுத்தியும், பொங்கல் வைத்தும் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். இதனால் நேற்று அதிகாலை முதலே பாபநாசம் தாமிரபரணி ஆற்று படித்துறை, அகத்தியர் அருவி ஆகியவற்றில் பக்தர்கள் கூட்டத்தை காணமுடிந்தது.