- சேவியர்ஸ் கல்லூரியில் நடைபெற்ற சைபர் க்ரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
- சைபர் க்ரைம் ஆய்வாளர் திரு.ராஜ் அவர்கள் தலைமை தாங்கினார்.
பாளையங்கோட்டையில் உள்ள சேவியர்ஸ் கல்லூரியில் மாணவர்களுக்கான சைபர் க்ரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறை ஆய்வாளர் திரு.சரவணன் அவர்களின் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட சைபர் க்ரைம் ஆய்வாளர் திரு.ராஜ் அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சைபர் க்ரைம் பற்றிய விழுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைபர் க்ரைம் ஆய்வாளர் திரு.ராஜ் அவர்கள் உரையாற்றி, மாணவ மாணவிகள் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் சைபர் க்ரைம் குற்றம் சம்மந்தமான புகார்களை 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும், புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள் திரளாக பங்குபெற்றனர்.
Image source: Facebook.com