திருநெல்வேலி மாவட்டம்., பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அகத்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் என்பதால் இங்கு தினமும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இந்நிலையில் கடந்த 26-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வந்ததன் காரணமாக 7 நாட்கள் சுற்றுலா பயணிகள் மலைப்பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். தற்போது புலிகள் கணக்கெடுக்கும் பணி முடிவடைந்து நேற்று முதல் அகஸ்தியர் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று அகத்தியர் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.