- புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா.
- நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்கள் விழாக்கோலம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 19/02/2022 அன்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று கவுன்சிலர்களாக பதவியேற்க உள்ளனர்.
மாவட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சி, அம்பாசமுத்திரம், களக்காடு, விக்கிரமசிங்கபுரம் ஆகிய மூன்று நகராட்சிகள், சங்கர் நகர், நாரணம்மாள்புரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, மணிமுத்தாறு, கோபாலசமுத்திரம், மேலச்செவல், முக்கூடல், பத்தமடை, பணகுடி, ஏர்வாடி, வீரவநல்லூர், திருக்குறுங்குடி, வடக்கு வள்ளியூர், நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, திசையன்விளை ஆகிய 17 பேரூராட்சிகள் உள்ள நிலையில் 388 கவுன்சிலர்கள் இன்று பதவியேற்க உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.
Image source: maalaimalar.com