தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணிவதை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் பயணித்த பயணிகள் முகக்கவசம் அணிந்துள்ளார்களா? என்பதை கவனிக்க மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். பின்னர் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டு அங்கு கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத துணிக்கடைக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை செய்தனர். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வடசேரி பேருந்து நிலையம் மற்றும் அண்ணா பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்துகளில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டார்கள்.