பாளையங்கோட்டை காவலர் உணவகத்தில் பணியாற்றிய 5 காவலர்கள், களக்காடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 5 காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர் என ஏராளமான காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர் இந்த நிலையில் நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் திரு.துரைகுமார் அவர்களின் உத்தரவின்பேரில் அனைத்து காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தினமும் 100 பேர் வீதம் அனைத்து காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.