விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மேகநாதரெட்டி தலைமையில் தேர்தல் பார்வையாளர் பாலசந்தர், எஸ்.பி.மனோகர் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வாக்கு பதிவு நடைபெறும் நாளில் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும், வாக்குப்பதிவிற்கு வரும் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.