செய்திக்குறிப்புகள்:
- நெல்லையில் அரசு பொருட்காட்சி அரங்குகள் அமைக்கும் பணியை மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
- அரசு பொருட்காட்சி வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கி 45 நாட்கள் நடைபெற இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் நெல்லையில் அரசு பொருட்காட்சி அரங்கம் நடைபெற அரசு ஏற்பாடு செய்துள்ளது . மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் அரங்கம் அமைக்கும் அதற்கான பணியை தொடங்கி வைத்தனர்.
ஒவ்வொரு வருடமும் நெல்லை டவுனில், பொருட்காட்சி அரங்கம் அரசு சார்பில் நடைபெற்று வருகின்றது . கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருட்காட்சி நடைபெறாமல் இருந்தது. அரசு, பொருட்காட்சி அரங்கம் நடத்துவதற்கு இந்த வருடம் அனுமதி அளித்துள்ளது .
இந்த அரசு பொருட்காட்சி வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கி தொடர்ந்து 45 நாட்கள் நடைபெற இருக்கிறது.
பொருட்காட்சி அரங்கம் நடைபெறும் இடம் ; நெல்லை டவுன் வ உ சி மணிமண்டபம் அருகில் உள்ள காலியிடம் .
இதற்கான பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பந்தக்கால் நடுதல் இந்த நிகழ்ச்சியில் , நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், தூய்மை மேயர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
மாநகராட்சி மண்டல தலைவர்கள் மகேஸ்வரி , ரேவதி , பிரபு, கவுன்சிலர்கள் சுப்பிரமணியன் அல்லாபிச்சை , கந்தன் மாரியப்பன் , மன்சூர் மற்றும் திமுக நிர்வாகி மூலிக்குளம் பிரபு , மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பொதுமக்கள், இந்த அரசு துறை திட்டங்களின் சிறப்பு அம்சங்களை அறிந்து கொள்வதற்காக இந்த அரங்குகள் அமைக்கப்பட இருக்கிறது.
மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடக்கூடிய அழகிய ராட்டினங்கள், சுவையூட்டும் உணவு அரங்கங்கள், பழங்காலத்து கைவினைபொருட்கள் , இன்றைக்கு தேவையான பரிசு பொருட்கள் என பொதுமக்கள் வாங்குவதற்கு உரிய கடைகள் , பொழுதுபோக்கு அம்சங்கள் கூடிய நிகழ்ச்சிகள் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த பொருட்காட்சி அரங்கத்தில் இடம்பெறுகிறது.
கொரோனா காரணமாக தடைப்பட்ட அரசு பொருட்காட்சி அரங்கம் இப்பொழுது மீண்டும் ஏற்பாடு செய்வதால் பொதுமக்கள் அதிகமான அளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக மேலும் மக்களை கவரும் விதமாக மிகச் சிறப்பாக இந்த அரங்கத்தை அரசு ஏற்பாடு செய்து இருக்கிறது.
Image source: dailythanthi.com