திருநெல்வேலி மாவட்டம்., மானூரில் காவலர்கள் - பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் கைப்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சரவணன் அவர்கள் உத்தரவுப்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மானூர் காவல்துறை ஆய்வாளர் முன்னிலை வகிக்க, தாழையூத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. ஜெபராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். இந்த விளையாட்டு போட்டியில் 13 அணிகள் கலந்து கொண்டு விளையாடிய நிலையில் முதல் பரிசு கானார்பட்டி அணிக்கும், இரண்டாவது பரிசு உக்கிரன்கோட்டை அணிக்கும், மூன்றாவது பரிசு மானூர் காவலர் அணிக்கும் கிட்டியது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கோப்பை வழங்கி கெளரவிக்கப்பட்டது.