செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் கல்லூரி மாணவிகள் அரசு விடுதிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்.
- பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு தகுதி உடையவர்கள் விடுதிகளில் விகிதாசார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியாளர் அறிவிப்பு.
திருநெல்வேலி மாவட்டம் கல்லூரி மாணவிகள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியாளர் விஷ்ணு அறிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் அரசு பள்ளி மாணவிகள் விடுதிகளில் கல்லூரி மாணவிகளுக்கான சேர்க்கை நடைபெற இருக்கிறது .
பாளையங்கோட்டை, நல்லம்மாள்புரம், அம்பை உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அரசு பள்ளி மாணவிகள் விடுதிகள், மற்றும் கூட்டப்புளியில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அரசு பள்ளி மாணவிகள் விடுதி இவற்றில் காலியான இடங்கள் உள்ளது. பட்டப்படிப்பு , பட்ட மேற்படிப்பு படிக்கும் தகுதி உடைய மாணவிகள் இந்த விடுதிகளில் விகிதாசார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் மட்டுமே மாணவிகள் இந்த விடுதிகளில் சேர்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான தகுதியுடைய மாணவிகள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மற்றும் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் கொடுக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், மற்றும் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் இதற்கான விண்ணப்ப படிவங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
மாணவிகள் தங்களுடைய ஜாதி மற்றும் பெற்றோர் ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்களை விண்ணப்பம் நகலோடு பதிவு செய்ய வேண்டும். அரசின் இந்த சலுகையை பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியாளர் விஷ்ணு அறிவித்துள்ளார்.
Image source: dailydhanthi.com