- ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாட்டம் அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடைபெற்றது.
- நெல்லை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
நெல்லையில் நடந்த சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் .பள்ளி மாணவ மாணவியர்களின் கண் கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவ மாணவிகள் கண்கவர் விழாவில் கலந்து கொண்டனர் இந்தியாவில் நேற்று 75வது சுதந்திர தின விழா மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது
நெல்லை மாவட்டம் நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் காலை 9-10 நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அவர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார் அப்பொழுது போலீஸ் இசைக்குழு சார்பில் தேசிய கீதம் பேண்ட் வாத்தியத்துடன் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது . திறந்த ஜீப்பில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சென்று போலீசாருடைய அணிவகுப்பை பார்வையிட்டார்.ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, போலீஸ் நெல்லை மாவட்ட போலீஸ் சரவணன் ஆகியோர் உடன் சென்றனர்.
ஆதிதிராவிட நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் துறை, சமூக பாதுகாப்பு திட்டம், தோட்டக்கலை துறை ஆகியவை சார்பில் மொத்தம் 20 பேருக்கு 6, 77 300 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பாராட்டு சான்றிதழ்கள் வழங்குதல் நிகழ்ச்சியும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவில் துணை மேயர் கே .ஆர். ராஜு, சரவணன், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார், டி .ஜி பிரவேஷ்குமார், அனிதா ,துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் ,மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Image source: dailythanthi.com