கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு நகராட்சியில் வரும் 19/02/2022 அன்று நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை சுமுகமாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவில் ஆட்சியர் வளாகத்தில் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன் அவர்கள் முன்னிலை வகிக்க, மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்ரியா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மார்த்தாண்டன்துறை, நீரோடி, வள்ளவிளை, கொல்லங்கோடு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய கொல்லங்கோடு நகராட்சி உள்ளாட்சி தேர்தலை சுமுகமாக நடத்துவது குறித்து அப்பகுதியின் பங்குத்தந்தை மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது.