- ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28ஆம் தேதி தொடங்குகிறது.
- நெல்லையில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி விளையாடும் விளையாட்டு செஸ் விளையாட்டு. நல்ல அறிவு வளர்ச்சிக்கு மேம்பாட்டு விளையாட்டாக முக்கியத்துவம் பெறுகின்றது செஸ் விளையாட்டு.
ஆதலால் பெரியவர்கள் தம்முடைய குழந்தைகளுக்கு செஸ் விளையாட்டினை மிகவும் ஆர்வத்தோடு கற்றுக் கொடுத்து வருவது மிகவும் சிறப்புக்குறிய விஷயம் என்பது பெருமைக்குரிய செய்தி.
சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. வருகின்ற ஜூலை மாதம் 28ம் முதல் ஆகஸ்டு 10 வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது.
இதனை ஊக்குவிக்கும் விதமாக நெல்லையில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சபாநாயகர் அப்பாவு அவர்கள் தொடங்கி வைத்து பேசினார்.
செஸ்போட்டியை பற்றி பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஆர்வத்தோடு விளையாடினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி மேயர் சரவணன் , துணை மேயர் ராஜு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Image source: dailythanthi.com